/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் யானை பராமரிப்பு: அதிகாரிகள் குழு ஆய்வு
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் யானை பராமரிப்பு: அதிகாரிகள் குழு ஆய்வு
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் யானை பராமரிப்பு: அதிகாரிகள் குழு ஆய்வு
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் யானை பராமரிப்பு: அதிகாரிகள் குழு ஆய்வு
ADDED : மார் 19, 2025 06:31 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா பராமரிப்பு குறித்து கால்நடைத்துறை, வனத்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.
இந்த யானையின் உடல் நலன், பராமரிப்பு, வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை, இத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.
நேற்று மாலை 4:00 மணிக்கு கால்நடை துறை உதவி இயக்குனர் முருகன், டாக்டர் சுப்பிரமணியன், புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ், வனச்சரகர் செல்வமணி, அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜ், செயல் அலுவலர் சக்கரையம்மாள் குழுவினர், யானையை ஆய்வு செய்தனர்.
இதில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் யானை தங்கும் இடத்தில் பசுமை பந்தல் அமைத்தல், நீர்ச்சத்து பழங்கள் வழங்குதல் உட்பட பல்வேறு நடைமுறைகளை கடைப்பிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.