/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி. தாலுகா அலுவலக புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
/
ஸ்ரீவி. தாலுகா அலுவலக புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
ஸ்ரீவி. தாலுகா அலுவலக புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
ஸ்ரீவி. தாலுகா அலுவலக புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
ADDED : பிப் 10, 2024 04:14 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.5.30 கோடி மதிப்பில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்திற்கு, தை மாத அமாவாசை நாளான நேற்று காலை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தாசில்தார் செந்தில் குமார் வரவேற்றார்.
பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில்;
ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 ஆயிரத்து 300 சதுரஅடி பரப்பளவில் இரண்டு தளம் கொண்ட புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட உள்ளது. 11 மாதங்களில் பணி முடிந்து, திறப்பு விழா நடத்தப்படும். என்றார்.
விழாவில் நகராட்சி தலைவர் ரவி கண்ணன், ஒன்றிய குழு தலைவர்கள் ஆறுமுகம், சிந்து முருகன், நகரச் செயலாளர் அய்யாவு பாண்டியன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.