/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., குட்டதட்டி மலையில் யானைகள் நடமாட்டம்
/
ஸ்ரீவி., குட்டதட்டி மலையில் யானைகள் நடமாட்டம்
ADDED : டிச 06, 2024 05:11 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் இருந்து நகருக்குள் செல்லும் ரோட்டில் உள்ள குட்டதட்டி மலையில் யானைகள் நடமாட்டம் காணப்பட்டதையடுத்து வனத்துறையினர் அதனை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள் கடந்த சில மாதங்களாக வனத்தை விட்டு வெளியேறி ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகத் தோப்பு, பந்த பாறை, ரங்கர் கோயில், ரங்கர் தீர்த்தம், மேல தொட்டியப்பட்டி வரை மாலை நேரங்களில் தோப்புகளில் புகுந்து மா, தென்னை, வாழை, கொய்யா, கரும்பு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர் தினமும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் இதுவரை யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவார் தோப்புகளில் சுற்றி தெரிகிறது.
இந்நிலையில் செண்பகத் தோப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஊருக்குள் வரும் பாதையில் உள்ள குட்டத்தட்டி மலையில் நேற்று மாலை முதல் நேற்று அதிகாலை வரை பெரும் அலறலுடன் யானைகள் சுற்றி திரிந்துள்ளது. வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் யானையை, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.