/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் குழு ஆய்வு
/
ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் குழு ஆய்வு
ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் குழு ஆய்வு
ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் குழு ஆய்வு
ADDED : பிப் 23, 2024 05:34 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் தேசிய தரச் சான்றிதழ் குழு மருத்துவர்கள் நேற்று முதல் மூன்று நாட்கள் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.
நேற்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தரச் சான்றிதழ் குழுவை டாக்டர்கள் பத்ரா, சுசில் தேவேந்திர சவான், சுஷ்மா ஆய்வு செய்தனர்.
நேற்று முதல் நாளை (பிப்ரவரி 24) வரை மூன்று நாட்கள் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு சிகிச்சை பிரிவு குறித்தும், பணியாளர்கள், மருத்துவ கருவிகள், நோயாளிகளின் வருகை, சிகிச்சை அளிக்கப்படும் விவரங்கள் உட்பட ஆய்வு செய்கின்றனர்.
இக்குழுவினரின் கேள்விகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிராஜ் மற்றும் டாக்டர்கள், பார்மசிஸ்ட்டுகள், செவிலியர்கள் பதிலளித்தனர்.
இக்குழுவினரின் பரிந்துரையின் பேரில் அரசு மருத்துவமனைக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மத்திய அரசின் பல்வேறு நிதி உதவிகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.