/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
/
பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
ADDED : டிச 27, 2024 02:39 AM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இரவு பணியில் இருந்த சக பெண் போலீசிடம் போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ., மோகன்ராஜை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டார்.
சத்திரப்பட்டி அருகே தொம்பகுளத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் 53, ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணிபுரிந்து வருகிறார். டிச. 23 இரவு பணியில் பெண் போலீசிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்றார் . பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் மோகன்ராஜின் நிலை குறித்து தனது அலைபேசியில் வீடியோ எடுத்து எஸ்.பி., கண்ணனுக்கு அனுப்பி வைத்தார்.
அரசு மருத்துவமனைக்கு போலீசார் மோகன்ராஜை அழைத்துச் சென்று சோதனை செய்ததில் மது போதையில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக மோகன்ராஜ் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணை அடிப்படையில் மோகன்ராஜை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.