/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை மருத்துவமனையில் பணியாளர்களுக்குள் அடிதடி * தற்காலிக ரேடியோகிராபர் விடுவிப்பு

ADDED : ஏப் 16, 2025 01:30 AM

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாளர்களுக்குள் ஏற்பட்ட அடிதடியையடுத்து தற்காலிக ரேடியோகிராபர் ராஜ் 32, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அருப்புக்கோட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜ் 32, தற்காலிக அடிப்படையில் ரேடியோகிராபராக உள்ளார். இவர் பணிக்கு வந்து ஒரு வாரமே ஆன நிலையில் நேற்று காலை 11:30 மணிக்கு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர் உமா மகேஸ்வரி 37, ஒரு நோயாளியுடன் எக்ஸ்ரே அறைக்கு வந்துள்ளார். அங்கு செருப்புடன் வரக்கூடாது என ராஜ் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் உமா மகேஸ்வரி செருப்பால் ராஜ் தன்னை அடித்து விட்டதாக அழுது கொண்டு அங்கிருந்த மற்ற தூய்மை பணியாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் சேர்ந்து ராஜை தாக்கினர். அங்கு இருந்த மருத்துவ பணியாளர்கள் இருவரையும் விலக்கி விட்டனர்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி இளங்கோ கூறியதாவது: அடிதடி சம்பவம் தொடர்பாக இருவரையும் நாளை விசாரணை செய்ய உள்ளோம். இதுகுறித்து உடனடியாக மருத்துவ இணை இயக்குனருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ரேடியோகிராபர் அருப்புக்கோட்டை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.