/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி அரசு கல்லுாரியில் தேங்கிய மழை நீர் மாணவர்கள் அவதி
/
சிவகாசி அரசு கல்லுாரியில் தேங்கிய மழை நீர் மாணவர்கள் அவதி
சிவகாசி அரசு கல்லுாரியில் தேங்கிய மழை நீர் மாணவர்கள் அவதி
சிவகாசி அரசு கல்லுாரியில் தேங்கிய மழை நீர் மாணவர்கள் அவதி
ADDED : நவ 06, 2024 07:22 AM

சிவகாசி: சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் நுழைவாயில் அருகே மழை நீர் தேங்கி இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி ஆனையூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் ஆயிரம் மாணவர்கள் வரை படிக்கின்றனர். கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் நடந்து செல்லும் பாதையில் பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நுழைவாயில் அருகே பள்ளமாக மாறிவிட்டது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி விடுகின்றது.
கல்லுாரிக்கு வருகின்ற மாணவர்கள், பேராசிரியர்கள் தண்ணீரை மிதித்து உடைகள் நனைந்தபடியே தான் கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் அனைவரும் பெரிதும் சிரமப்படுகின்றனர். தவிர தண்ணீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோயினை ஏற்படுகிறது. எனவே இங்கு மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.