/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களை பரிசீலிக்க அவகாசம் வருவாய்த்துறை போராட்ட அறிவிப்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களை பரிசீலிக்க அவகாசம் வருவாய்த்துறை போராட்ட அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களை பரிசீலிக்க அவகாசம் வருவாய்த்துறை போராட்ட அறிவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களை பரிசீலிக்க அவகாசம் வருவாய்த்துறை போராட்ட அறிவிப்பு
ADDED : செப் 24, 2025 02:45 AM
காரியாபட்டி:'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்படும் மனுக்களை பரிசீலிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென்பதுட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செப்.25) முதல் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபடுவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சங்க மாநில தலைவர் சையது அபுதாஹிர், மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதர துறை மனுக்களைப் போல் அல்லாமல் வருவாய்த்துறை, நில அளவைத்துறை மனுக்கள் மீது சார் நிலை அலுவலர்களின் அறிக்கைகளைப் பெற்று இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டி உள்ளது. முடிவு செய்ய 90 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் ஆயிரக்கணக்கில் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து முடிவு செய்திடவும், ஆயிரக்கணக்கில் வரப் பெற்றுள்ள மகளிர் உரிமைத் தொகை மனுக்களை கள விசாரணை செய்ய துணை தாசில்தார் பணியிடம் வழங்க வேண்டும்.
அனைத்து கோட்டங்களிலும் நீதிமன்ற வழக்குகளை கையாள்வதற்கு தனி துணை தாசில்தார் பணியிடம் உருவாக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள லீகல் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மாவட்டங்களில் சட்டப்படிப்பு முடித்துள்ள தாசில்தார்களை நேர்முக உதவியாளர் சட்ட பணிகள் பணியிடம் ஏற்படுத்தி நியமனம் செய்ய வேண்டும்.
நேரடி நியமன உதவியாளர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு பெற, உதவியாளர் நிலையில் 5 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டிய உள்ளது. பதவி உயர்வு உதவியாளர்களுக்கு உள்ளதை போல் 4 ஆண்டுகள் என விதிகளில் திருத்தம் செய்ய அரசாணை வழங்கிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பேப்பர், எழுதுபொருட்கள் உள்ளிட்ட செலவினங்களை மேற்கொள்ள வருவாய் துறைக்கு நிதி ஒதுக்கிட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 25 முதல் மாநில முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கருப்பு பட்டை, கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வார்கள், என அதில் கூறப்பட்டுள்ளது.