/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்
/
நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்
ADDED : அக் 16, 2025 11:53 PM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சாத்துார் என்.மேட்டுப்பட்டி எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை(அக். 18) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்க உள்ளது.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், என பல்வேறு மருத்துவசேவைகள் வழங்கப்படும். பரிசோதனைகள் கட்டணமின்றி செய்யப்படும். எனவே சாத்துார் என்.மேட்டுப்பட்டி அதை சுற்றியுள்ள ஊர்கள், மக்கள் அனைவரும் குறிப்பாக பதிவு பெற்ற, பெறாத கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள், நலவாரிய ஓய்வூதியதாரர்களும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம், என்றார்.