/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் நடு ரோட்டில் நின்ற பஸ் அவதிப்பட்ட பயணிகள்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் நடு ரோட்டில் நின்ற பஸ் அவதிப்பட்ட பயணிகள்
ஸ்ரீவில்லிபுத்துாரில் நடு ரோட்டில் நின்ற பஸ் அவதிப்பட்ட பயணிகள்
ஸ்ரீவில்லிபுத்துாரில் நடு ரோட்டில் நின்ற பஸ் அவதிப்பட்ட பயணிகள்
ADDED : அக் 16, 2025 11:53 PM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லியில் அரசு பஸ் பிரேக்டவுன் ஆகி நடு ரோட்டில் நின்றதால் பயணிகள் வேறு பஸ்சில் சென்றனர். அந்த பஸ்சை ரோட்டோரமாக தள்ளி நிறுத்த உதவினர். மக்கள் தள்ளி விடும் வீடியோ பரவி விருகிறது.
நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து மல்லி வழியாக திருத்தங்கலுக்கு அரசு டவுன் பஸ் சென்றது.
மல்லி பஜார் வீதியில் ஸ்பீடு பிரேக் அருகே பிரேக் டவுன் ஆகி நடுரோட்டில் நின்றது. இதனால் அப்பஸ்சில் வந்த மாணவர்கள், பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்பகுதியில் இருந்த மக்கள் பஸ்சை தள்ளி சென்று ரோட்டில் ஓரமாக நிறுத்த உதவியுள்ளனர். பின்னர் போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ் பழுதை சரி செய்து எடுத்துச் சென்றனர். இச்சம்பவ வீடியோ பரவி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பஸ் டிப்போவில் பல டவுன் பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் புதிய பஸ்களை இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.