/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
/
நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ADDED : அக் 31, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:  தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் விருதுநகர் நகராட்சி முஸ்லிம் உ யர்நிலைப்பள்ளியில் நாளை(நவ. 1) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, என பல்வேறு மருத்துவசேவைகள் வழங்கப்படும். பரிசோதனைகள் அனைத்தும் கட்டணமின்றி செய்யப்படும்.
எனவே விருதுநகர் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் அனைவரும் குறிப்பாக பதிவு பெற்ற, பெறாத கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள், நலவாரிய ஓய்வூதியதாரர்களும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம், என்றார்.

