ADDED : பிப் 13, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் டூ செய்முறை தேர்வு துவங்கியது.
பிளஸ் டூ படிக்கும் 13 ஆயிரத்து 174 மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். 185 மையங்களில் தேர்வு நடந்தது. முதன்மை பாடங்களான இயற்பியல், வேதியியல், கணினி அறியவியல், உயிரியல் செய்முறை தேர்வும், நர்சிங், ஆடிட்டிங், ஆடைவடிவமைப்பு, வேளாண் அறியவில் உள்ளிட்ட செய்முறை தேர்வும் நடந்தன.
இந்த வாரம் முழுவதும் செய்முறை தேர்வு நடக்க உள்ளது. அடுத்த வாரத்திற்கு பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன.