ADDED : மார் 18, 2024 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சியில் சாக்கடை பணிகளுக்காக தோண்டி 15 நாள் கடந்தும் பணிகள் தொடங்காதது குறித்து தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று மீண்டும் பணிகள் துவங்கின.
ராஜபாளையம் நகராட்சி மாடசாமி கோயில் மெயின் ரோட்டில் இருந்து இணைப்பு ரோடுகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில் ரோடுகளை கடக்கும் சாக்கடை தரைப்பகுதிகளில் குடிநீர் கழிவு நீர் குழாய்கள் தடை ஏற்படுத்தி வருவதால் கழிவுகள் தேங்கி சிக்கலை ஏற்படுத்தி வந்தது.
ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடிக்காமல் பல்வேறு காரணங்களை கூறி பாதியில் விட்டு சென்றதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று காலை நிலுவையில் வைத்திருந்த சாக்கடை தரைப்பால பணிகளின் வேலை துவங்கி உள்ளது.

