ADDED : ஆக 28, 2025 04:38 AM

சிவகாசி : சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மூன்று நாட்கள் மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டி நடந்தது.
ஆண்கள் பிரிவில் 8 அணிகள் பெண்கள் பிரிவில் ஆறு அணிகள் பங்கேற்றது. போட்டிகள் லீக், நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன.
இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை எம்.சி.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி முதல் இடத்தையும், கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
ஆண்கள் பிரிவில் கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி முதலிடத்தையும், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் இயக்குனர் அண்ணாமலைச்சாமி, விஜயமோகினி பரிசு, கோப்பை வழங்கினர்.
ஏற்பாடுகளை கல்லுாரி இணைச் செயலாளர் ராஜேஷ், காளீஸ்வரி கூடைப்பந்து கழக நிர் வாகிகள் செய்தனர்.