/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநில கால்பந்து போட்டி துவக்கம்
/
மாநில கால்பந்து போட்டி துவக்கம்
ADDED : ஜூன் 27, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: விருதுநகர் மாவட்ட கால்பந்தாட்ட கழகம், தமிழ்நாடு கால்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில ஜூனியர் ஆடவர் கால்பந்து போட்டிகள் நேற்று துவங்கியது.
எஸ்.எச்.என்.எட்வர்டுமேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரி விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடந்தன. பள்ளி செயலாளர் தியாகராஜன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
நேற்று காஞ்சிபுரம், திருவாரூர், நீலகிரி, தர்மபுரி, திருப்பூர், விருதுநகர், மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல் அணிகள் பங்கேற்றன.