/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநில அளவிலான வினாடி வினா போட்டி
/
மாநில அளவிலான வினாடி வினா போட்டி
ADDED : அக் 26, 2024 04:43 AM
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் 10வது மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடந்தது.
முதல்வர் காளிதாச முருகவேல் தலைமை வகித்தார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து 134 பள்ளிகளில் இருந்து 268 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
வினாடி வினா போட்டியை சுமந்த் சி. ராமன் தொகுத்து வழங்கினார்.சிவகாசி ஒய்.ஆர்.டி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசு ரூ25,000 பெற்றனர்.
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 2ம் பரிசு 15,000, விருதுநகர் பி. எஸ். சிதம்பர நாடார் ஆங்கிலப்பள்ளி 3ம் பரிசு 10,000 பெற்றனர்.
ஆறுதல் பரிசு ரூ 5000, ரூ.2000, ரூ1500 எனபோட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.