ADDED : அக் 06, 2024 04:48 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடந்த கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவு வாலிபால் இறுதி போட்டியில் மாணவர்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லுாரி, மாணவியர் பிரிவில் சென்னை வேல்ஸ் முதலிடம் பிடித்தது.
ராஜபாளையத்தில் மாவட்ட வாலிபால் சங்கம், ராஜபாளையம் சிட்டி வாலிபால் கிளப், நாடார் மேல்நிலைப்பள்ளி சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவு வாலிபால் போட்டி நான்கு நாட்கள் நடந்தது.
தமிழகம் முழுவதும் 56 கல்லுாரிகளிலிருந்து மொத்தம் 660 மாணவர்கள் மாணவியர் பங்கேற்றனர். பள்ளி மைதானம் ஊர்க்காவல் படை என 4 ஆட்டக்களங்களில் பகல் இரவு போட்டிகளாக நடந்தது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளின் மாணவியர் இறுதி சுற்றில் சென்னை வேல்ஸ் அணி கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர் அணியினரை வென்றது. மாணவர்கள் போட்டியில் எஸ்.ஆர்.எம் அணியினர் சென்னை வைஷ்ணவா கல்லுாரியை வென்று முதல் இடம் பிடித்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு மெர்கண்டைல் பேங்க் மண்டல மேலாளர் கவுதமன், தலைவர் வடமலையான், எஸ்.பி., கண்ணன், ஊர் செயலர் அழகுராஜா, உறவின்முறை செயலாளர் கென்னடி பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை மதுரை சரக துணை ராம்குமார் ராஜா, ஏ.கே.டி டிரஸ்ட் செயலாளர் கிருஷ்ணமராஜூ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.