ADDED : பிப் 15, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ஸ்போர்ட்டொனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, ஸ்பார்ட்டன் ஃபிட்னஸ் சென்டர் சார்பில் ஆர்.எஸ்.ஆர்., சர்வதேச பள்ளியில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடந்தது.
பல்வேறு மாவட்டத்தில் இருந்து பிரி கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரையிலான 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மகேந்திரன், பள்ளி முதல்வர் முத்துலட்சுமி பதக்கங்கள் வழங்கினர். இதில் 10 குழந்தைகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யபட்டனர்.

