/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பா.ஜ.,தான் ஆட்சியில் இருக்கும்; மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி

ADDED : ஆக 07, 2025 07:22 AM

சிவகாசி: இன்னும் 100 ஆண்டுகளுக்கு அல்ல. இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பா.ஜ.,தான் ஆட்சியில் இருக்கும், என சிவகாசியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
நேற்று சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சாத்துாரில் பா.ஜ., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் சரவணதுரை ராஜா, பாண்டுரங்கன் தலைமை வகித்தனர். மாநில துணைத்தலைவர் கோபால்சாமி முன்னிலை வகித்தார்.
மாநில பொதுச் செய லாளர் பொன் பால கணபதி, மாநில செயற்குழு உறுப்பினர் சோலையப்பன் பேசினர்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
உலகத்தில் தலைசிறந்த தலைவராக மோடி உள்ளார். இன்னும் 100 ஆண்டு களுக்கு அல்ல, இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பா.ஜ., தான் ஆட்சியில் இருக்கும்.
2029ல் அதிக பா.ஜ., எம்.பி.,க்களை தமிழகத் தில் இருந்து லோக்சபாவிற்கு அனுப்புவதே நமது இலக்கு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. பா.ஜ., கூட்டணி ஆட்சியை பிடிக்கும். திருநெல்வேலியில் ஆக. 17ல் நடக்கும் தமிழக பாரதிய ஜனதா பூத் கமிட்டி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய தலைவர் நட்டா பங்கேற்க வாய்ப்புள்ளது.
பூத் கமிட்டி நிர்வாகிகள் தினமும் 20 வீடுகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து நமக்கு விழும் ஓட்டுகளை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பா.ஜ.,வுக்கு ராஜபாளையம், சாத்துார், விருதுநகர் ஆகிய தொகுதிகள் வெற்றி வாய்ப்பு மிகுந்த தொகுதி களாகும், என்றார்.