ADDED : செப் 27, 2024 04:25 AM
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன் மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தின் 5வது மாநில பிரதிநிதித்துவ கூட்டம் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.
இதில் சங்க பொதுச் செயலாளர் குருசாமி, பொருளாளர்சாலமன்,வரவேற்புக் குழுத் தலைவர் வேல்முருகன், ஓய்வு பெற்ற பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஊர்காவலன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், வி.சி.க., தலைவர் திருமாவளவன் பங்கேற்றனர்.
எம்.பி., திருமாவளவன் பேசியதாவது:சுதந்திரம் பெற்ற பின் பிரதமராக இருந்தநேரு தலைமையில் உள்துறை அமைச்சராக இருந்தசர்தார் வல்லபாய் பட்டேல் பலசமாஸ்தானங்களை ஒன்றினைத்து இந்தியாவை உருவாக்கினார், என்றார்.
அமைச்சர்சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது:வி.சி.க., தலைவர் திருமாவளவன் பிறவி பேச்சாளர். எந்த தலைப்பு கொடுத்தாலும் சிறப்பாக பேசும் வல்லமை கொண்டவர். நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை நானும், திருமாவளவனும் இணைந்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம், என்றார்.