
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாநில நீச்சல் போட்டி நடந்தது.
கல்லுாரித் தலைவர் பழனிச்சாமி தலைமையில் வகித்தார். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். புள்ளிகளின் அடிப்படையில் மதுரை சி.இ.ஒ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 34 புள்ளிகள், திருநெல்வேலி டைட்டன்ஸ் நீச்சல் கழகம் 88 புள்ளிகள் பெற்று சுழற்கோப்பை வென்றனர்.
கல்லுாரி மாணவர்கள் பிரிவில் மதுரை யாதவா கல்லுாரி 49 புள்ளிகள், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை 32 புள்ளிகள் பெற்று சுழற்கோப்பை வென்றனர். செயலாளர் சர்ப்பராஜன், கல்லுாரி முதல்வர் சாரதி, பொருளாளர் சக்திபாபு, காமராஜர் பொறியியல் கல்லுாரி செயலாளர் தர்மராஜன், சுயநிதி பாட பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.