ADDED : ஆக 27, 2026 07:21 PM
ராஜபாளையம், ஆக. 28-
ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரியில் 4 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நேற்று துவங்கியது. நேற்று 1,168 மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவிலான வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் 4 நாட்கள் நடக்கிறது.
ஆக.27 முதல் 30 வரை நடக்கும் இப்போட்டயில் மாணவர் மாணவிகளுக்கு தனி தனியாக 14,17,19 வயது பிரிவின் கீழ் நடக்கிறது.
நேற்று நடந்த மாணவிகளுக்கான போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1,168 மாணவிகள் பங்கேற்றனர். 8 களங்களில் நாக் அவுட், குரூப், கால் இறுதி போட்டிகளாக நடந்தன.
அரையிறுதி, இறுதிப் போட்டிகள் இன்றும், மாணவர்களுக்கான போட்டிகள் ஆக.29, 30-ல் நடைபெறுகிறது. இதில் பிரிவு வாரியாக முதலிடம் பெரும் மாணவர்கள் காஷ்மீர், நாகாலாந்து மாநிலங்களில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கவித்துள்ளனர்.
