ADDED : செப் 30, 2024 04:22 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், ராஜபாளையம் சிட்டி வாலிபால் சங்கம் சார்பில் மாநில அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி துவங்கியது.
சென்னை, திருச்சி, கோவை, வேலுார், கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து கல்லுாரி மாணவர்கள் 38 அணியும், மாணவிகள் 28 அணி என 850 பேர் பங்கேற்கின்றனர். காலை 7:00 மணிக்கு தொடங்கி மொத்தம் எட்டு ஆட்டக்களங்களில் பகல் இரவு போட்டிகளாக லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகளாக நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி அக்.2 மாலை நடைபெறும்.
நேற்று மாலை 7:00 மணிக்கு போட்டிகளை எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், ஊர்க்காவல் படை மதுரை சரக துணைத் தளபதி ராம்குமார் ராஜா தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழக கவுரவ செயலாளர் துரைசிங், ராஜபாளையம் சிட்டி வாலிபால் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.