UPDATED : அக் 26, 2026 07:21 PM
ADDED : அக் 26, 2026 07:16 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் ராவ் பகதுார் எ.கா.த. தர்மராஜாவின் 148 வது பிறந்தநாள் முன்னிட்டு சந்தையில் அவரது புனரமைக்கப்பட்ட உருவச் சிலை திறப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு விழா நடந்தது.
உருவச் சிலையை மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் திறந்து வைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இ.பி.எல் பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ., குடிநீர் இயந்திரத்தை தொழிலதிபர் ரமணி திறந்து வைத்தார். அன்னதானம் நடந்தது. சந்தை வியாபாரிகள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
