/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'குரூப் ‛டி' ஊழியர்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றம் அவுட்சோர்சிங் முறையில் நிரப்ப நடவடிக்கை

ADDED : பிப் 01, 2025 04:50 AM
விருதுநகர்: மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் குரூப் 'டி' பணியாளர்கள் முன்னறிவிப்பு இன்றி வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். இப்பணியிடங்களில் படிப்படியாக அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள், வாட்ச்மேன், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட குரூப் 'டி' பணிகளில் உள்ளவர்களை முன்னறிவிப்பு இன்றி வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்து வருகின்றனர். இப்பணியிடங்களில் படிப்படியாக அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏற்கனவே துாய்மை பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிந்து வருகின்றனர். அரசு போக்குவரத்து துறையிலும் அவுட்சோர்சிங் முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது குரூப் 'டி' நிலையில் உள்ள மற்ற பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுப்பது ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு முற்றிலுமாக பறிபோகும் நிலை உண்டாகியுள்ளது.