/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் மாவுக்கல் மணி கண்டெடுப்பு
/
விஜயகரிசல்குளம் அகழாய்வில் மாவுக்கல் மணி கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் மாவுக்கல் மணி கண்டெடுப்பு
விஜயகரிசல்குளம் அகழாய்வில் மாவுக்கல் மணி கண்டெடுப்பு
ADDED : டிச 25, 2024 02:42 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை, சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள் உள்ளிட்ட, 2,850க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது, பியான்ஸ் எனப்படும் பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யப்பட்ட நீள் வட்ட வடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''இந்தப் பொருட்களை வட மாநிலங்களில் இருந்து வாங்கி, முந்தைய தமிழர்கள் வாணிபத்தில் ஈடுபட்டுஉள்ளது தெரிய வருகிறது. முன்னோர்கள் கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்துஉள்ளனர்,'' என்றார்.