/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கடையநல்லுாரில் தண்டவாளத்தில் கல்: பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா
/
கடையநல்லுாரில் தண்டவாளத்தில் கல்: பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா
கடையநல்லுாரில் தண்டவாளத்தில் கல்: பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா
கடையநல்லுாரில் தண்டவாளத்தில் கல்: பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா
UPDATED : செப் 27, 2024 06:49 AM
ADDED : செப் 27, 2024 03:06 AM

ஸ்ரீவில்லிபுத்துார்,:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கல்லை வைத்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. மாலை 6:50 மணிக்கு கடையநல்லுார் ரயில் நிலையத்தை அடுத்து சங்கனாபேரி பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தின் ஓரத்தின் பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.
அதைப்பார்த்த இன்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்து ஓட்டியதில் கல்லின் முனை உரசி சென்றதையடுத்து ரயில் சங்கரன்கோவில் ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்து மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இரவு 11:00 மணிக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அங்கு இருட்டாக இருந்ததால் விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மதுரை-- செங்கோட்டை வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் உஷார்படுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.
திருச்சி ரயில்வே எஸ்.பி., ராஜன் தலைமையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை நேற்று காலை பார்வையிட்டனர். ரயில்வேத் துறை அதிகாரிகளும் தண்டவாளங்களை ஆய்வு செய்தனர்.
டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில் 4 தனிப்படை போலீசார் கல் வைத்தவர்களை தேடி வருகின்றனர். இதுவரை இந்த வழித்தடத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதநிலையில், தற்போது தண்டவாளத்தில் கல் வைத்து பொதிகை ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.