/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
லாரிகளில் திறந்த நிலையில் கற்கள்
/
லாரிகளில் திறந்த நிலையில் கற்கள்
ADDED : ஜன 16, 2025 04:46 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகரில் திறந்த நிலையில் லாரிகளில் கற்களை ஏற்றி செல்வதால் விழுந்துவிடுமோ என்ற பீதியில் வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி, திருச்சுழி, ஆலடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் குவாரிகள், தனியார் கிரஷர்கள் உள்ளன. இவற்றில் இருந்து கற்கள், ஜல்லிகள், எம். சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் நகரை சுற்றி பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் பொருட்களை மூடி பாதுகாப்பாக கொண்டு செல்லாமல் திறந்த நிலையில் செல்வதால் கற்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே நகரத்தில் உள்ள ரோடுகள் பள்ளமாக பல பகுதிகள் உள்ளது. இவற்றில் கற்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் பள்ளத்தில் இறங்கி ஏறும்போது கற்கள் விழுந்து விடும்.
காலை, மாலை என நகரில் தற்போது அதிக அளவில் பாதுகாப்பில்லாமல் கனரக வாகனங்கள் கற்களை கொண்டு செல்கின்றன.
போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து ஆய்வாளரும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து லாரிகளில் கற்களை மூடி பாதுகாப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.