/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாட்டு கொட்டகையில் பட்டாசு இருப்பு வைப்பு
/
மாட்டு கொட்டகையில் பட்டாசு இருப்பு வைப்பு
ADDED : பிப் 22, 2024 12:18 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்,- சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் மாட்டு கொட்டகையில் பட்டாசு இருப்பு வைத்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் செல்லப்பாண்டியன், பட்டாசு ஆலை உரிமையாளர் சந்திரசேகர் ஆகியோர் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், தனது உதவியாளருடன் நேற்று முன்தினம் ஈஞ்சார் கிராமத்தில் தணிக்கை செய்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் செல்லபாண்டியனின் மாட்டு கொட்டகையில், அனுமதியின்றி 2 பட்டாசு பெட்டிகள்,9 மூடை சட்டி வெடிகள், 3 மூடை சரஸ்வதி வெடிகள், 3 மூடை சீனிவெடிகள் இருப்பு வைத்துள்ளதை கண்டறிந்தார்.
இதனையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் செல்ல பாண்டியன் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.