/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருணி தண்ணீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் பாய்ந்து சேதமடைகிறது பயிர்கள்
/
ஊருணி தண்ணீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் பாய்ந்து சேதமடைகிறது பயிர்கள்
ஊருணி தண்ணீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் பாய்ந்து சேதமடைகிறது பயிர்கள்
ஊருணி தண்ணீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் பாய்ந்து சேதமடைகிறது பயிர்கள்
ADDED : அக் 31, 2025 01:43 AM

அருப்புக்கோட்டை:  -:  அருப்புக்கோட்டை அருகே ஊருணி நிறைந்து தண்ணீர் வெளியேற மறுகால் ஓடை இல்லாததால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து பயிர்கள் சேதம் ஆனதால்  விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கோவிலாங்குளம் ஊராட்சியில்  தவசி ஊருணி உள்ளது. ஊரில் உள்ள பெரிய கண்மாய் நிறைந்து ஓடை வழியாக தண்ணீர் வந்து இங்கு சேரும். பின் இங்கிருந்து மறுகால் ஓடை வழியாக கட்டங்குடிக்கு கண்மாய்க்கு செல்லும் வகையில் அமைப்பு உள்ளது. ஊருணியை சுற்றியுள்ள 300 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது.
இதன் மறுகால் ஓடை இருந்தது. பராமரிப்பு செய்யாமல் விட்டதால் சேதம் அடைந்து ஓடை காணாமல் போய்விட்டது. 3 ஆண்டுகளாக ஊருணியில் தண்ணீர் நிறைந்து வெளியேற முடியாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து பயிர்கள் சேதமடைகிறது.
இதுகுறித்து விவசாயிகள்: மறுகால் ஓடை அமைக்க பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஊருணிக்கு அருகில் உள்ள கழிவுநீர் ஓடை  வழியாக உபரி நீர் சென்றுவிடும் என கூறினர்.
கழிவுநீர் ஓடையில்  உபரிநீர் செல்ல முடியாமலும்,  அதில் உள்ள கழிவு நீரும் ஊருணியில் தான் கலக்கிறது.  மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஊருணிக்கு மறுகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

