/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தெருநாய்கள் தொல்லை: அச்சத்தில் மக்கள்
/
தெருநாய்கள் தொல்லை: அச்சத்தில் மக்கள்
ADDED : ஆக 12, 2025 06:10 AM
சிவகாசி : சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் அதிக அளவிலான நாய்கள் நடமாட்டத்தால் சிறுவர்கள், மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், கங்காகுளம், வெள்ளையாபுரம் ரோடு, குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் தெருவில் போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகின்றது. தெருவில் குழந்தைகள் , சிறுவர்கள் விளையாட முடியவில்லை. இப்பகுதி மாணவர்களையும் நாய்கள் விட்டு வைப்பதில்லை. மேலும் டூவீலர்களில் செல்பவர்களை விரட்டும்போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மொத்தமாக ரோட்டில் நாய்கள் திரிவதால் விலகிச் செல்லவும் வழியில்லை. எனவே இப்பகுதிகளில் தெருவில், ரோட்டில் நடமாடுகின்ற நாய்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.