/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தளவாய்புரத்தில் ----தெருநாய் தொல்லை
/
தளவாய்புரத்தில் ----தெருநாய் தொல்லை
ADDED : ஜன 30, 2024 07:15 AM

தளவாய்புரம் : தளவாய்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ரோட்டில் செல்பவர்களை விரட்டி கடிப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
செட்டியார் பேரூராட்சியை சுற்றி தளவாய்புரம், முகவூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணிவரை குடியிருப்பு பகுதி மெயின் ரோடுகளில் மக்கள் தனியாக கடந்து செல்ல முடியாத அளவுக்கு நாய் தொல்லை அதிகரித்துள்ளது.
டூவீலர் சைக்கிளில் வருபவர்களை நாய்கள் அச்சுறுத்துவதும், விரட்டி கடிப்பதும் தொடர்கிறது. குறிப்பாக நாய்களைப் பார்த்து ஒதுங்கி ஓடும் பள்ளி குழந்தைகளை துரத்துகின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நிதிநிலை மற்றும் உயர்நீதிமன்ற தடை உத்தரவை காரணமாக காட்டி தட்டிக் கழிக்கின்றன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அலையும் சூழல் அதிகரித்துள்ளது. உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.