தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆகம விதிகளுக்கு உட்பட்டு சிலை பிரதிஷ்டை செய்ய போராட்டம்

 ஆகம விதிகளுக்கு உட்பட்டு சிலை பிரதிஷ்டை செய்ய போராட்டம்

 ஆகம விதிகளுக்கு உட்பட்டு சிலை பிரதிஷ்டை செய்ய போராட்டம்


ADDED : ஜூலை 08, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுவத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் அணைக்கரைப்பட்டி பகுதி மக்கள் அளித்த மனு:

வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயில் மூலவர் சன்னதியில் இருந்த கற்சிலை 2025 ஜன. ல் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய சிலை செய்து பிரதிஷ்டை செய்யமாநில வல்லுனர் குழு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் தனிநபர் ஒருவர் 2025 பிப்.ல் புதிய சிலை வழங்கினார். இச்சிலை மாநில தலைமை ஸ்தபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடத்திற்கும், ஆகம விதிகளுக்கும் முரணாக உள்ளது.

கோயிலின் புனரமைப்பு, திருப்பணிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையிலே சிலையை பிரதிஷ்டை செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் வழங்கிய சிலையை பிரதிஷ்டை செய்தால் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும்.

இச்சிலையை நாளை(ஜூலை 9)பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இதை ஹிந்து சமய அறநிலையத்துறை தடுத்து நிறுத்தி ஆகம விதிகளுக்கு உட்பட்டு புதிய சிலை செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும், என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us