ADDED : ஜூலை 08, 2026 02:11 AM

விருதுநகர்: விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் நுாறு நாள் வேலை தரக் கோரி நந்திரெட்டியபட்டி மக்கள் முற்றுகையிட்டனர்.
சிவஞானபுரம் ஊராட்சி நந்திரெட்டியபட்டியில் 340 பேர் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தனர். இவர்களுக்குஒரு வாரம் மட்டுமே வேலை தந்ததாகவும், அதற்கு பின் தரவில்லை என்றுக் கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: புது புத்தகம் வந்தால் தான் வேலை என்கின்றனர். வயதான எங்களை போன்றவர்கள் நுாறு நாள் வேலையை நம்பி தான் வாழ்கிறோம்.
எங்கு வேணாலும் செல்லுங்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். எங்களுக்கு நுாறு நாள் வேலை கொடுக்க வேண்டும். இதை தரவும் யாரும் முன்வருவதில்லை.கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தும் ஒரு வாரம் மட்டுமே தந்தனர், என்றனர்.இதையடுத்து விரைவில் பணிகள் தருவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.
