/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.சி., பி.சி., விடுதிகளில் மாணவர் சேர்க்கை
/
எஸ்.சி., பி.சி., விடுதிகளில் மாணவர் சேர்க்கை
ADDED : செப் 15, 2025 03:57 AM
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் வருகை பதிவு மற்றும் அடிப்படை விஷயங்கள் குறித்து வருவாய் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 56 விடுதிகளும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 47 விடுதிகளும் உள்ளன. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வின் போது ஆதிதிராவிடர் விடுதியில் கலெக்டர் ஆய்வு செய்ததில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது தெரிந்தது.
இதனை அடுத்து மாவட்டத்தில் இரு துறையின் 81 விடுதிகளை ஆய்வு செய்து புகைப்படத்துடன் செப். இறுதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் ஆய்வின் போது மாணவர்கள், பணியாளர்கள் வருகை பதிவேடு, நடப்பு விபரம், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு, அரசின் அட்டவணைப்படி உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து புகைப்படத்துடன் அறிக்கையை அளிக்க வேண்டும்.
மேலும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் நல்லோசை இணையதளத்தில் ஆய்வு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இதே போன்று மாதம் இருமுறை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.