ADDED : மார் 17, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: தர்மபுரியை சேர்ந்தவர் கிரிவாசன், 20, வேலுார் மாவட்டம் திருப்பத்துாரை சேர்ந்தவர் கோகுல், 20, திருவண்ணாமலை மாவட்டம் அண்ட பள்ளத்தை சேர்ந்தவர் மகாஸ்ரீநாத், 20, சேலத்தைச் சேர்ந்தவர் பூபேஷ், 20, மயிலாடுதுறை மாவட்டம் திருவாழியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 20, ஆகிய 5 பேரும் அரியலுாரில் உள்ள அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.
இவர்கள் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல தானிப்பாறைக்கு வந்துள்ளனர். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பை கண்டறிந்து, மீன் வெட்டி பாறையில் குளிக்க வந்துள்ளனர். காலை 10:30 மணியளவில் அங்கு குளிக்கும் போது மாணவர் கிரிவாசன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.. மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

