ADDED : டிச 24, 2024 04:06 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் 1956 முதல் 1959 வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் குடும்ப விழா ஒன்றிணைப்பு தலைவர் பிருந்தாவன் தலைமையில் அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
இதில் செயலாளர் சந்தோஷ்குமார், பொருளாளர் ராஜமாணிக்கம் உள்பட முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கணேசன் செய்தார்.
