/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர் தற்கொலை ஆசிரியர் மீது வழக்கு
/
மாணவர் தற்கொலை ஆசிரியர் மீது வழக்கு
ADDED : பிப் 16, 2024 04:45 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் பள்ளி மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஆசிரியர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.
ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீலயம் 15, வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தெற்கு போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் மாரிச்சாமி சக மாணவர்கள் முன்பு கண்டித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி மாணவரின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் இருந்து உடலை வாங்க மறுத்து விட்டனர்.
இதனை அடுத்து ஏ.டி.எஸ்.பி சோமசுந்தரம், டி.எஸ்.பி., நாகராஜன், முதன்மை கல்வி அதிகாரி சிதம்பரநாதன் மாணவர்களிடம் விசாரணை செய்ததுடன் ஆசிரியர் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்ததை அடுத்து ஸ்ரீலயம் உடலை பெற்றோர் மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொண்டனர்.