தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்கள் தர்ணா

மாணவர்கள் தர்ணா

மாணவர்கள் தர்ணா


ADDED : செப் 26, 2024 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நரிக்குடி: திருச்சுழி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நரிக்குடி மேலேந்தல் அருகே அரசு கலை, அறிவியல் கல்லூரி ரூ. 16 கோடியே 46 லட்சம் செலவில் கட்டப்பட்டு, பிப்.27ல் திறக்கப்பட்டது.

இங்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் சரிவர இருக்கை வசதி இல்லாததால் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி கல்லுாரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நரிக்குடி போலீசார், பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, வகுப்பறைக்கு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us