தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்கள் நம்பகத்தன்மை, நேர்மை நேர மேலாண்மையை வளர்க்க வேண்டும்

மாணவர்கள் நம்பகத்தன்மை, நேர்மை நேர மேலாண்மையை வளர்க்க வேண்டும்

மாணவர்கள் நம்பகத்தன்மை, நேர்மை நேர மேலாண்மையை வளர்க்க வேண்டும்


ADDED : நவ 24, 2024 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி : நம்பகத்தன்மை, நேர்மை, நெகிழ்வுத் தன்மை, அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, நேர மேலாண்மை ஆகிய பண்புகளை இந்த சமுதாயம் வேலை வழங்கும் தொழிற்கூடங்கள் எதிர்பார்க்கும். அதனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் லிமிடெட் துணைத் தலைவர் ராமையா சேதுராமலிங்கம் மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பேசினார்.

பட்டமளிப்பு விழாவிற்கு கல்லுாரி தாளாளர் டென்சிங், நிர்வாக குழு இணைச் செயலாளர் பிருதிவிராஜ் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் அறிவழகன் துவக்கி வைத்தார். சென்னை எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் லிமிடெட் துணைத் தலைவர் ராமையா சேதுராமலிங்கம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது, 2024 ல் உலக உற்பத்தி தொழில் திறன் மதிப்பு பல மடங்கு உயரப் போகின்றது.

இது தற்போதைய செமி கண்டக்டர் அதாவது குறை கடத்தியின் பயன்பாட்டினால் நிகழப் போகின்றது. உலக அளவில் இந்த குறை கடத்திகளின் வியாபார மதிப்பு பன்மடங்கு உயர்வதால் அனைத்து துறையிலும் நல்ல முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாகும். ஒரு இளம் பட்டதாரியிடமிருந்து நம்பகத்தன்மை, நேர்மை, நெகிழ்வுத் தன்மை, அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, நேர மேலாண்மை ஆகிய பண்புகளை இந்த சமுதாயம் மற்றும் வேலை வழங்கும் தொழிற்கூடங்கள் எதிர்பார்க்கும்.

அதனை செவ்வனே வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களின் பயன்பாடு தேவையான அளவு இருக்க வேண்டும். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மனிதனுக்கும் இவ்வுலகிற்கும் மிகுந்த பயன் அளிப்பதாக இருப்பது மட்டுமின்றி இயற்கைக்கு எந்த கேடும் விளைவிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us