/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்கள் அலைபேசியை கவனமாக கையாள வேண்டும்
/
மாணவர்கள் அலைபேசியை கவனமாக கையாள வேண்டும்
ADDED : ஜன 26, 2025 05:19 AM

சாத்துார் : மாணவர்கள் அலைபேசியை கவனமாக கையாள வேண்டும், என சாத்துாரில் நடந்த பள்ளிஆண்டு விழாவில் துரை எம்.பி. கூறினார்.
சாத்துார் கம்ம மகா ஜன டிரஸ்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி 38 வது ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைவர் திருவேங்கடசாமி தலைமை வகித்தார். செயலாளர் பெருமாள் சாமி, ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.இணைச் செயலாளர் ராஜேஷ் பெருமாள் வாழ்த்தினார் .தலைமை ஆசிரியை புஷ்பலதா ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் , பரிசு வழங்கி ம.தி.மு.க.தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரை எம்.பி. பேசியபோது கூறியதாவது: பொறுமை உழைப்பு கட்டுப்பாடு இருந்தால் வாழ்வில் நிச்சயம் முன்னுக்கு வரலாம். மாணவர்கள் அலைபேசியில் சமூக வலைதளங்களில் மூழ்கி விடக்கூடாது. அலைபேசி உங்கள் நேரத்தை களவாடி விடும் மிகக் கவனமாக அலைபேசியை பயன்படுத்த வேண்டும். என்றார்.
முன்னதாக நிருபர்களை சந்தித்த துரை எம்.பி. கூறியதாவது:நடிகர் விஜய் தற்போது தான் கட்சி ஆரம்பித்துள்ளார் வாழ்த்துக்கள். கவர்னர் நடத்தும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது அவரது கட்சிக்கு கேடாக முடியும் என்பது எனது கருத்து என்றார்.

