/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலம் சேதத்தால் மாணவர்கள் அவதி
/
பாலம் சேதத்தால் மாணவர்கள் அவதி
ADDED : நவ 17, 2025 02:24 AM

சேத்துார்: சேத்துார் அருகே பள்ளி செல்லும் ஓடை பாலம் சீரமைக்காததால் மாணவர்கள் சங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சேத்துார் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 50க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. இதன் அருகே மகளிர் சுகாதார வளாகம் உள்ளது.
பள்ளி, அங்கன்வாடி மையம், மகளிர் சுகாதார வளாகம் செல்ல இப்பகுதியில் உள்ள ஓடையை கடந்து செல்ல வேண்டும். கடந்த மாதம் பெய்த மழையில் ஓடையில் அமைக்கப்பட்டிருந்த பாலம் முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றியத்திற்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதனால் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செல்லும் மாணவர்கள், சுகாதார வளாகம் செல்லும் பெண்கள் ஓடை பள்ளத்தில் இறங்கி ஏறி சென்று சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை காலங்களில் மாணவர்கள் தண்ணீரில் விழுந்து விபத்திற்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. ஓடையை கடப்பதற்கு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

