/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உதவும் உள்ளங்களுக்கு நன்றி செலுத்திய மாணவர்கள்
/
உதவும் உள்ளங்களுக்கு நன்றி செலுத்திய மாணவர்கள்
ADDED : பிப் 02, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊரணிப்பட்டி தெரு நகர மன்ற நடுநிலைப்பள்ளியில், தங்களுக்கு உதவும் உள்ளங்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் ரேணுகாதேவி தலைமையில் நடந்தது.
இதில் மாணவர் சமுதாயத்திற்கு தினமும் உதவும் போக்குவரத்து காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், சத்துணவு அங்கன்வாடி சமையலர்கள், காலை உணவு கொண்டு வரும் வாகன ஓட்டுநர் ஆகியோர்களை மாணவர்கள் நேரில் சந்தித்து தாங்கள் தயாரித்த வாழ்த்து அட்டைகளை வழங்கி நன்றி கூறினர்.