/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக கல்லுாரியை முற்றுகையிட்ட மாணவிகள்
/
அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக கல்லுாரியை முற்றுகையிட்ட மாணவிகள்
அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக கல்லுாரியை முற்றுகையிட்ட மாணவிகள்
அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதாக கல்லுாரியை முற்றுகையிட்ட மாணவிகள்
ADDED : பிப் 09, 2025 04:39 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தனியார் மகளிர் கல்லுாரி அங்கீகாரம் இன்றி செயல்படுவதாகவும், செமஸ்டர் தேர்வுகளுக்கு போலியான ஹால் டிக்கெட் வழங்குவதாகவும், சான்றிதழ்களை திரும்ப கோரி மாணவிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் அருகே இயங்கும் தனியார் மகளிர் கல்லுாரியில் பேச்சுலர் ஆப் எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிசன், பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி, டிப்ளமோ இன் நர்சிங், டிப்ளமோ லேப் டெக்னாலஜி என 4 பிரிவுகள் உள்ளது. இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இக் கல்லுாரியில் நேற்று பி.எஸ்சி.. பிரிவிற்கு செமஸ்டர் தேர்வு நடந்ததாகவும், அதற்காக விநியோகம் செய்யப்பட்ட தேர்வு நுழைவுச்சீட்டில் எந்தவித கையெழுத்தும் இல்லை எனவும் ஒரு சிலருக்கு கையால் எழுதப்பட்ட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டதாகவும் இதில் சந்தேகம் அடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு இது குறித்து தெரிவித்தனர்.
நேற்று மாலை பெற்றோருடன் மாணவிகள் தங்களுடைய சான்றிதழ்களை திரும்ப வழங்குமாறும் கட்டிய பணத்தை திரும்ப தரக் கோரியும் போராட்டம் செய்தனர். போலீசார் பெற்றோர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சான்றிதழ்கள் கட்டிய பணத்தை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். விருப்பமுள்ள 50க்கும் மேற்பட்ட மாணவிகள் சான்றிதழ்கள் பணத்தை திரும்ப பெற மனு அளித்தனர். மாற்று சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவிகள் பெற்றுக் கொண்டனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.