/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி-திருச்சுழி ரோட்டில் அடுத்தடுத்த வேகத்தடைகள்
/
நரிக்குடி-திருச்சுழி ரோட்டில் அடுத்தடுத்த வேகத்தடைகள்
நரிக்குடி-திருச்சுழி ரோட்டில் அடுத்தடுத்த வேகத்தடைகள்
நரிக்குடி-திருச்சுழி ரோட்டில் அடுத்தடுத்த வேகத்தடைகள்
ADDED : ஏப் 11, 2025 04:28 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் இருந்து நரிக்குடி, திருச்சுழி செல்லும் ரோட்டில் அடுத்தடுத்த வேகத்தடையால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கி தவிக்கின்றனர். இதனால் வேகத்டைகளை அப்புறப்படுத்த எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டியில் இருந்து நரிக்குடி, திருச்சுழி வழித்தடத்தில் முடுக்கன்குளம், எஸ். மரைக்குளம், பனைக்குடி, பி.புதுப்பட்டி, எஸ்.தோப்பூர், சித்துமூன்றடைப்பு உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் உள்ளன. ஏராளமான கனரக வாகனங்கள், பஸ், கார், டூவீலர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் வந்து செல்கின்றன. இரு வாகனங்கள் செல்லும் அளவிற்கு தான் ரோடு உள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு ஊர், கோயில், பள்ளி வளாகம் இருக்கும் இடங்கள் என ஒரு வழித்தடத்தில் தலா 50க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை 1:30 மணி நேரம் கடக்க வேண்டி இருக்கிறது. அவசரத்திற்கு வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. வேகத்தடையில் ஏறி இறங்குவதற்குள் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கிறது.
இரவு நேரங்களில் டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் கவனிக்காமல் செல்வதால் வேகத்தடையால் விபத்தில் சிக்குகின்றனர். பெரும்பாலான வேகத்தடைகளில் மிளிரும் கோடுகள் இருப்பதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதால், வேகத் தடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.