/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள்
/
சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள்
சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள்
சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 18, 2024 12:31 AM

விருதுநகர்: விருதுநகர் சிவகாசி ரோட்டின் திடீர் பள்ளங்களால் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறிநிலைகுலைகின்றனர்.
விருதுநகர் சிவகாசி ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வரை இயக்கப்படுகின்றன. பட்டாசு, அச்சகம் போல விருதுநகரில் இருந்து மிளகாய் வத்தலும், பருப்பும் இவ்வழியில் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் தற்போது திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருவதாலும் பலர் இந்த ரோடு வழியாக தான் ஸ்ரீவில்லிபுத்துார் செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த ரோட்டில் ஆங்காங்கே உள்ள சிறு சிறு பள்ளங்களால் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
திடீரென வாகனங்கள் நிலைகுலைகின்றன. டூவீலர்களில் செல்வோர் இது போன்ற சிறு பள்ளத்தில் சிக்கினால் தடுமாறி விபத்தை சந்திக்கின்றனர். சிறு சிறு பள்ளங்களில் பேட்ஜ் பணிகள் செய்து சரி செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.