/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி
/
சாத்துாரில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி
ADDED : மார் 07, 2024 05:03 AM
சாத்துார்: சாத்துாரில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாத்துார் மெயின் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, நான்கு ரத வீதி பகுதிகளில் நாளுக்கு நாள் புற்றீசல் போலஆக்கிரமிப்பு கடைகள் உருவாகிவருகின்றன.
ரோடு வரை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளன. காலை மாலை நேரங்களில் அதிக அளவு இருசக்கர வாகனங்கள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுவதால் பாதசாரிகள் நடந்து செல்லவும் வழி இன்றி அவதிப்படும் நிலை உள்ளது. பள்ளிக்குச் சைக்களில் செல்லும் மாணவர்கள் வாகன நெரிசலுக்கு ஆளாகி தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். போக்குவரத்து போலீசாரால் நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் சாத்துாரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு சீரானது. தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.
போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளையாவது நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றிட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கினறனர்.

