ADDED : நவ 21, 2025 04:41 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சர்வீஸ் ரோடு போடும் பணியைஅரைகுறையாக விட்டு விட்டதால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றன.
அருப்புக்கோட்டை காந்தி நகர் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடுகள் உள்ளன. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை நகர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் வந்து செல்ல சர்வீஸ் ரோடு வசதியாக இருக்கிறது. 20 நாட்களுக்கு முன்பு 2 சர்வீஸ் ரோடுகளையும் புதியதாக தார் ரோடு அமைக்கும் பணி நடந்து வந்தது.
இதில், மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வரும் சர்வீஸ் ரோட்டின் ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதியில் ரோடு அமைத்துள்ளனர்.
இதனால் இந்த ரோட்டில் வேகமாக வரும் வாகனங்கள் ரோடு இல்லாத பகுதிக்கு வரும் பொழுது தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெடுஞ்சாலை துறையினர் விடுபட்ட பகுதியில் தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

