/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்குறிச்சியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் அவதி
/
கல்குறிச்சியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் அவதி
கல்குறிச்சியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் அவதி
கல்குறிச்சியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் அவதி
ADDED : ஜூலை 26, 2025 03:15 AM

காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சிக்கு விருதுநகர் மார்க்கமாக ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக 20க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
கல்குறிச்சி முக்கு ரோட்டில் இருந்து விருதுநகர் ரோட்டில் நான்கு வழி சாலை வரை ஆக்கிரமித்து பொருட்களை போட்டு வைத்துள்ளனர். கற்களை நட்டு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இரு வாகனங்கள் விலகிச் செல்ல சிரமம் ஏற்படுகிறது. ஆபத்தான சூழ்நிலை இருப்பதால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. நடந்து செல்பவர்கள் விலகி நிற்க இடம் இல்லை.
விபத்து ஏற்படுவதற்கு முன் விருதுநகர் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிக்காதபடி தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.