/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொங்கல் பண்டிகைக்காக நேரடி கொள்முதல் கரும்பு விவசாயிகள் ஏக்கம்
/
பொங்கல் பண்டிகைக்காக நேரடி கொள்முதல் கரும்பு விவசாயிகள் ஏக்கம்
பொங்கல் பண்டிகைக்காக நேரடி கொள்முதல் கரும்பு விவசாயிகள் ஏக்கம்
பொங்கல் பண்டிகைக்காக நேரடி கொள்முதல் கரும்பு விவசாயிகள் ஏக்கம்
ADDED : டிச 27, 2025 06:05 AM

விருதுநகர்: பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இந்தாண்டு கரும்புகளை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்யுமா' என விருதுநகர் கரும்பு விவசாயிகள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
பொங்கல் பண் டிகைக்கு தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கரும்புகளை தமிழக அரசு கொள்முதல் செய்வது வழக்கம்.
ஆனால் முந்தைய ஆண்டுகளில் விருதுநகர் மாவட்ட விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யாமல் மற்ற மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
மாவட்டத்தின் எரிச்ச நத்தம், தாதன்குளம், நடையனேரி, முருகனேரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும் கரும்பின் விளைச்சல் மக்களுக்கு வழங்கும் அளவுக்கு இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தயக்கம் காட்டுவதால் பல விவ சாயிகள் கரும்பை தவிர்த்து மானாவாரி பயிர்களை நடவு செய்யத் துவங்கினர்.
இந்தாண்டு 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசன நீரில் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் பொங்கல் கரும்புகள் விளைச்சல் மிகுந்து காணப்படுகின்றன.
கடந்தாண்டு ஒரு கட்டு ரூ.250க்கு விலைபோன நிலையில் இந்தாண்டு ரூ.350க்கு மேல் விலையை எதிர்ப்பார்த்து இருக்கும் விவசாயிகள், தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து விவ சாயிகள் முருகன், சுப்பிர மணியன் கூறியதாவது:
நடையனேரி, தாதன்குளம், முருகனேரி பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்புகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மழை குறைந்தாலும் கிணற்று நீர் பாசனத்தில் அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டில் 2 சிறிய, 13 பெரிய கரும்புகள் வீதம் 15 கரும்புகள் கட்டப்படுகின்றன.
பதினோரு சென்ட் நிலப்பரப்பில் கரும்பு நடவு செய்து விளைச்சல் கொண்டு வர மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. வெட்டுக் கூலி 20 கட்டுக்கு ரூ.2000 வரை செலவாகிறது. ஒரு கரும்பு கட்டு குறைந்தபட்சம் ரூ.320க்கு விற்றால் தான் கட்டுப்படியாகும். வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் எங்களுக்கு இழப்பு ஏற் படுகிறது.
எனவே தமிழக அரசு வியாபாரிகளிடம் மட்டும் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளிடமும் உரிய விலைக்கு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

